SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்ரூட் ஆலு கட்லெட்

2022-06-23@ 16:06:29

தேவையான பொருட்கள்:

துருவிய பீட்ரூட் - 1 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
நெய் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் துருவிய பீட்ரூட்டை எடுத்து, அதில் உள்ள அதிகப்படியான ஜூஸை கையால் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வேகர்க்கடலை, மாங்காய் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். பின் கையில் சிறிது நெய்யைத் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள கட்லெட் துண்டுகளை வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், பீட்ரூட் ஆலு கட்லெட் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SYDNEYY111

    தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..

  • Mexico_Mayor

    மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

  • manipurlandaa1

    தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

  • America_Truck

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

  • wild-fire-california-30

    கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்