மட்டர் மலாய்
2022-06-22@ 18:01:02

தேவையானவை :
சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது,
சிறிய துண்டு இஞ்சி - நறுக்கியது,
2-3 பெரிய பூண்டு - நறுக்கியது,
ஏலக்காய் - 2,
வெங்காயம் - 1 நறுக்கியது,
முந்திரி - 2 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
பால் - 1/4 கப்,
தண்ணீர் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
பச்சைப் பட்டாணி - 1 கப்,
கிரீம் - 1/4 கப்,
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்.
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் தாளித்து, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, பூண்டு, ஏலக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், முந்திரி மற்றும் கசகசா சேர்க்கவும். வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் நன்கு ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த மசாலா சேர்த்து, பச்சை வாசனை முழுவதுமாக போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பால் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் ஊறிய பச்சைப் பட்டாணி சேர்த்து வேகவைக்கவும். வெந்த பின்னர் கிரீம் சேர்த்து கலக்கவும். வாணலியை மூடி, சிறு தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். கரம் மசாலா தூவி இறக்கவும். சப்பாத்தி, ரொட்டி உடன் பரிமாறவும்.
Tags:
மட்டர் மலாய்மேலும் செய்திகள்
வாழைத்தண்டு புலாவ்!!
ரோஜா பூ சட்னி
பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்
அடை தோசை
பொரிச்ச பரோட்டா
பச்சைப் பட்டாணி சீஸ் தோசை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!