SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் க்ரீன் கறி

2022-06-21@ 17:21:04

தேவையானவை:

மட்டன் – அரை கிலோ
பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
சோம்பு  – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் –  5
கொத்தமல்லித்தழை – அரை கட்டு
தேங்காய்த் துருவல் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
வினிகர் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 30 மிலி


செய்முறை:

மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் மட்டனை சேர்த்து வதக்கி, உப்பு, அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.

அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையுடன் வினிகர் மற்றும் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து நன்கு வேகவிடவும். மட்டன் நன்கு வெந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து கலவையை வேகவிடவும். பின்னர் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறிவிட்டு, குழம்பு தயார் ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்