SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரட் பஜ்ஜி

2022-06-20@ 17:59:49

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:

முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • vice-ele-6

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!

  • cong-protest-5

    விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!

  • school-girls-isro-5

    இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

  • america_nancy

    சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!

  • icelanddd111

    ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்