SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் மலாய் டிக்கா

2022-06-17@ 14:39:22

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை ஏலக்காய் – 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துருவிய சீஸ் – 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி நீரை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின்பு பிளெண்டரில்/மிக்ஸியில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி வெண்ணெய், க்ரீம், சீரகப் பொடி, ஏலக்காய், பச்சை மிளகாய், சீஸ் ஆகியவற்றை போட்டு நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை சிக்கனுடன் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, க்ரில் கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி, நெருப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும். அப்படி சுடும் போது வெண்ணெயை அவ்வப்போது தடவி சுட வேண்டும். இப்படி அனைத்து சிக்கன் துண்டுகளையும் சுட்டு எடுத்தால், சிக்கன் மலாய் டிக்கா ரெடி.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்