SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

2022-06-16@ 18:00:50

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்
பேபி கார்ன் – 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது)
கேரட் மற்றும் முட்டைக்கோஸ் – 1 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
பூண்டு – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெள்ளை வினிகர் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் – சிறிது
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் ரெடி!!!

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்