SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஜூ ஆப்பிள்

2022-06-15@ 15:19:44

தேவையான பொருட்கள்:-

முந்திரி - ஒரு கப்,
சர்க்கரை - அரை கப்,
தண்ணீர் - கால் கப்,
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் ஃபுட் கலர் - சில துளிகள்,
சிவப்பு ஃபுட் கலர் - சில துளிகள்,
சிறிய பெயின்ட் பிரஷ் - ஒன்று,
கிராம்பு - தேவையான அளவு.


செய்முறை:

முதலில் முந்திரி பருப்புகளை மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து சலித்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் அளவிற்கு நன்றாக பாகு காய்ச்சி கொள்ளுங்கள். பிறகு அரைத்த முந்திரி பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளறுங்கள். இவ்வாறு கைவிடாமல் கிளறுவதினால் சில நிமிடங்களில் கலவை நன்கு சுருண்டு வரும். சிறிதளவு மாவினை கை விரலால் எடுத்து உருட்டிப் பார்த்தால் உருண்டையாக வர வேண்டும். அதுவே சரியான பதமாகும்.

எனவே சரியான பதம் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி தட்டில் சிறிதளவு நெய் தடவி மாவினை ஊற்றி பரப்பி ஆற விடுங்கள். மாவானது கை பொருந்தும் அளவிற்கு ஆறிய பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைத்துக் கொள்ளுங்கள்.பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆப்பிள் வடிவத்திற்கு தயார் செய்யுங்கள். பிறகு இந்த உருண்டைகள் மீது சிவப்பு நிற ஃபுட் கலரினை பிரஷ் செய்து சிறிது நேரம் காயவைக்கவும். இறுதியாக உருண்டையின் நடுவில் சிறிய பள்ளம் பறித்து கிராம்பினை தலைகீழாக சொருகினாள் சுவையான காஜூ ஆப்பிள் தயார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்