SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடை தோசை

2022-06-13@ 16:26:55

தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 100 கிராம்.
துவரம் பருப்பு - 50 கிராம்.
பச்சரிசி - 50 கிராம்.
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 5.
பெருங்காயம் - கால் தேக்கரண்டி.
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி.
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.


பக்குவம்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து குருணை பதத்துக்கு அரைத்து வைக்கவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி, அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் ஊற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கறிவேப்பிலை, கொத்துமல்லி கலக்கவும். அடி கனமான தோசைக் கல்லில் வார்த்து எடுக்க வேண்டும். நான்ஸ்டிக் தவாவில் அடை செய்தால் மாவு சரியாக வேகாது. அடி கனமான இரும்புக்கல் சுவையைக் கூட்டும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • america_fire

    கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

  • mexico-mine-17

    மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

  • oil-tanker-17

    பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்