SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சைப் பட்டாணி சீஸ் தோசை

2022-06-10@ 17:39:25

தேவையானவை :

பச்சைப் பட்டாணி - 1/2 கப்,
தோசை மாவு - 1 கப்,
சீஸ் - தேவையான அளவு,
கேரட்,
முட்டைக்கோஸ் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
பீன்ஸ் - 1/4 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைத்து ஆறியபின் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், உப்பு சேர்த்து லேசாக வதக்கி கொள்ளவும். பட்டாணி கலவையை தோசை மாவில் கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை ஊற்றி மூடி வைத்து பாதி வெந்த பின் காய்கறி கலவையை பரவலாக தூவி விடவும். துருவிய சீஸை பரவலாக சேர்க்கவும். மல்லித்தழை தூவி சிறு தீயில் வைத்து வேக விட்டு எடுத்து சூடாக பரிமாறவும். காலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.\

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்