SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி

2022-06-06@ 18:04:35

தேவையான பொருட்கள்:

மஷ்ரும் 200 கிராம்
வெங்காயம் 1
சீரகம் 1/2 ஸ்பூன்
எண்ணெய் 50 மில்லி

வறுத்து அரைக்க

தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் 10 அல்லது 15
தனியா 2 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
கசகசா 1 ஸ்பூன்
ஏலக்காய் 2
அன்னாசிப்பூ 2
பட்டை 2
கிராம்பு 2

வதக்கி அரைக்க

சின்னவெங்காயம் 1 கப்
தக்காளி 3
இஞ்சி 1 துண்டு
பூண்டு 1


செய்முறை:

முதலில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தாளித்து வெங்காயம் வதக்கவும். வெங்காயம் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். செட்டிநாடு மஷ்ரும் கிரேவி தயார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்