சாமை வடகம்
2022-05-30@ 17:50:12

தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - ஒரு குவளை,
ஜவ்வரிசி - அரை குவளை,
பச்சை மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
பக்குவம்:
சாமை அரிசியைக் களைந்து 7 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்றாக அரைக்கவும். பாதி அரைத்ததும், சீரகம், ஊறவைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தனியாக அடிகனமான பாத்திரத்தில் நீர் விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை சிறிது, சிறிதாக ஊற்றி கைபடாமல் கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவைப் போட்டு, சுத்தமான துணியில் பிடித்த வடிவத்தில் பிழிந்து, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
Tags:
சாமை வடகம்மேலும் செய்திகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!