வேப்பம் பூ வடகம்
2022-05-27@ 17:42:16

தேவையான பொருட்கள்:
காய வைத்த வேப்பம்பூ 3 கப்
உளுந்து 1 கப்
மிளகு 1 தேக்கரண்டி
பெரிய சீரகம் 1 மேசைக்கரண்டி
சிறிய சீரகம் 1 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் 1/2 கப்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
மிளகாய் பிளேக்ஸ்
2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பக்குவம்:
மிளகு, சீரகத்தை பொடித்து கொள்ளவும். உளுந்தை நன்றாக கழுவி 5 மணிநேரம் ஊற வைத்து குறுனை பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் காய்ந்த வேப்பம் பூ மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலக்கவும்.பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும். வேப்பம்பூ வடகம் தயார்.
குறிப்பு:
பொதுவாக வடகத்தை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். அதிகபடியான வெயில் அதன் பிரதான சுவையை வடகத்தின் தன்மையையும் பாதிக்கும். தினமும் 11 மணி வெயிலில் காயவைத்து எடுக்கலாம் நாட்கள் அதிகமானாலும் பரவாயில்லை குறைவான நேரம் வைத்து எடுங்கள் போதும். பொதுவாக ஐந்து நாட்கள் முற்பகல் மற்றும் பிற்பகல் வெயிலில் சில மணி நேரம் வைத்து எடுத்தாலே போதும்.
Tags:
வேப்பம் பூ வடகம்மேலும் செய்திகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!