அவல் புளியோதரை
2022-05-17@ 17:51:54

தேவையானவை:
புளிக்கரைசல் - ½ கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த தனியா,
எள்ளு - தலா 1 டேபிள் ஸ்பூன்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
வறுத்து உடைத்த வேர்க் கடலை,
முந்திரி - தலா 1 டீஸ்பூன்.
உப்பு,
எண்ணெய்,
கறிவேப்பிலை - தேவைக்கு,
அவல் - ¼ கிலோ,
பெருங்காயம் தூள் - சிறிது.
செய்முறை:
அவலை சுத்தம் செய்து, அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வறுத்த முந்திரி, வேர்க்கடலையைத் தவிர்த்து விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அவலை அதில் கொட்டிக் கிளறவும். வறுத்த முந்திரி, வேர்க்கடலை, பெருங்காயத் தூள், எள்ளு, தனியாத் தூள் சேர்த்து தூவி, கிளறி இறக்கவும். சுவை, மணம் நிறைந்த புளியோதரை அவல் தயார். இது போல் தயிர் அவல், எலுமிச்சை அவல், பால் கற்கண்டு சேர்ந்த இனிப்பு அவலும் தயாரிக்கலாம்.
Tags:
அவல் புளியோதரைமேலும் செய்திகள்
வாழைத்தண்டு புலாவ்!!
மட்டர் மலாய்
ரோஜா பூ சட்னி
பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்
அடை தோசை
பொரிச்ச பரோட்டா
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!