SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி முட்டை போண்டா

2022-05-16@ 18:06:04

தேவையான பொருட்கள்:

முட்டை போண்டாவிற்கு...

வேக வைத்த முட்டை - 4
கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

முட்டை சில்லிக்கு...

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிது


செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டை போண்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி, போண்டா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது முட்டை போண்டா தயார். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மசாலா பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், முட்டை போண்டாக்களை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சில்லி முட்டை போண்டா தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்