SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெங்காய வத்தக் குழம்பு

2022-05-10@ 16:03:43

தேவை

வெங்காய வடகம் - 5
சாம்பார் வெங்காயம் -100 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 துண்டு.


பக்குவம்

வெங்காயத்தை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய வடகத்தை போட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பொரித்த வடகத்தை மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும். பின் அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து அதனுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், அதில் அனைத்து தூள்களையும் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதனுடன் மிக்சியில் பொடித்து வைத்த வடகத்தை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கெட்டியானவுடன் சிறிது வெல்லம் போட்டு இறக்க வேண்டும்.இந்த குழம்பு மிகவும் சுவைாயகவும் வாசனையாகவும் இருக்கும்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்