SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலாக்கொட்டை, மாங்காய் அரைத்துவிட்ட சாம்பார்

2022-05-09@ 17:13:28

தேவையானவை :

பலாக் கொட்டை - 15,
மாங்காய் சிறியது - 1,
குழைய வெந்த துவரம் பருப்பு - ½ கப்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - ½ கப்,
சாம்பார் வெங்காயம் - 6,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்.

வறுத்து அரைப்பதற்கு:

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் - 5,
கடலைப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்,
தனியா - 5 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் - 1,
பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இதழ்கள்.
மேல தூவுவதற்கு - அரிந்த மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:  

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் நீர் விட்டு கெட்டியாக அரைத்து தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயம் அரிந்து வதக்கி ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் ஊற்றி மேலும் 1 கப் நீர் விட்டு வதக்கிய வெங்காயம் போட்டு மாங்காயை அரிந்து போட்டு பலாக் கொட்டையின் மேல் தோலை உரித்து இரண்டாக அரிந்து போட்டு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேகவிடவும். காய்கள் முக்கால்பதம் வெந்ததும் அரைத்த விழுதினை ஊற்றி மேலும் இரு கொதி விட்டு துவரம்பருப்பு வேகவைத்ததையும் சேர்த்து தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கல்ந்து விடவும். இந்த மாங்காய் பலாக்கொட்டை சாம்பார் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். உப்புமா, பொங்கல் போன்றவற்றிற்கும் ஏற்றது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்