பனங்கிழங்கு பர்ஃபி
2022-05-05@ 18:02:19

தேவையானவை:
வேகவைத்த பனங்கிழங்கு. - 6
தண்ணீர் -1/4கப்
பனை வெல்லம். -1 கப்
ஏலக்காய் - 2
நெய் -2 டேபிள் ஸ்பூன்
துருவிய பாதம்,
பிஸ்தா -1 தேக்கரண்டி
பக்குவம்:
ஒரு தட்டில் ஒரு சிட்டிகை நெய் ஊற்றி நன்றாக தடவி வைக்கவும். குறைவான நீரில் பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை நீக்கி வேக வைத்துக்கொள்ளவும். பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் ஏலக்காய்யுடன் சேர்த்து லேசாக அரைத்து எடுக்கவும். தனியாக வாணலியில் ஒரு சிட்டிகை நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு பனைவெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பனங்கிழங்கு துருவல் வெல்லத்துடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும். இறுதியாக மீதமுள்ள நெய்யை சேர்த்து மேலும் ஒரு சில நிமிடம் நன்கு கிளர வேண்டும். பின்பு நெய் தடவிய தட்டில் பரப்பியை கொட்டி வெட்டவும். துருவிய பாதாம், பிஸ்தா, தெளித்தால் பர்ஃபி சுவையாக இருக்கும்.
Tags:
பனங்கிழங்கு பர்ஃபிமேலும் செய்திகள்
மைதா மில்க் பர்பி
கருப்பட்டி மிட்டாய்
ரோஜா பூ புட்டிங்
ரோஜா பூ ஜாம்
தம் ரூட் அல்வா
வெள்ளரிக்காய் பாயசம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!