கொத்துக்கறி பிரட்டல்
2022-05-02@ 18:00:46

தேவையான பொருட்கள்:
வெள்ளாட்டுக் கறி - 500 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலை எண்ணெய் - 1/4 கப்
சோம்பு - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
பக்குவம்:
எலும்பு இல்லாத ஆட்டுக்கறி துண்டுகளை கொத்தி எடுத்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்ந்த தண்ணீரில் நன்றாக வேக வைக்கவும். குறைவான நீரில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த ஆட்டுக்கறியில் மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கறியில் உள்ள தண்ணீர் நன்கு சுண்டும் வரை குறைவான வெப்பத்தில் வைக்கவும்.பிறகு சிறிது மிளகுத் தூள் சேர்க்கவும். கரண்டியால் நன்கு கொத்தி பின்னர் கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாறவும்.
Tags:
கொத்துக்கறி பிரட்டல்மேலும் செய்திகள்
மட்டன் கொத்துகறி அடை
முட்டை பர்கர்
மட்டன் க்ரீன் கறி
சிக்கன் மலாய் டிக்கா
முட்டை பாண் பிரியாணி
வஞ்சர மீன் ஃப்ரை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்