SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோழி உருண்டை குழம்பு

2022-05-02@ 17:57:53

தேவையான பொருட்கள்:

மிளகாய் தூள் - இரண்டு சிட்டிகை
மல்லி தூள் - இரண்டு சிட்டிகை
பட்டை - 2
கிராம்பு - 2
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி -2
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
சோம்பு - ஒரு சிட்டிகை
கசகசா - ஒரு சிட்டிகை.
உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்
கோழிக்கறி (எலும்பில்லாதது) - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
சோம்பு - ஒரு சிட்டிகை
மிளகு - ஒரு சிட்டிகை
பொட்டுக் கடலை - 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கு.


பக்குவம்

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு தேங்காய்த்துருவல், சோம்பு கசகசா, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும். பின்பு உருண்டைக்கு அரைக்க உள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும். தனியாக கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும். அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கோழி உருண்டை குழம்பு தயார். பரோட்டா, சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்