SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முந்திரி அப்பம்

2022-05-02@ 17:53:14

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- ஒரு கப்,
முந்திரி- கால் கப்,
சர்க்கரை- 1¼ கப்,
தேங்காய்த் துருவல்- 2 ஸ்பூன்,
பால்- முக்கால் கப்,
நெய் (அ) எண்ணெய்- பொரிப்பதற்கு.


பக்குவம்:

பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைக்கவும். முந்திரி, தேங்காய்த்துருவளை பால் சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையில் அரைத்து சலித்து அரிசி மாவையும் சேர்த்து பஜ்ஜி பதத்திற்கு கலந்து கொள்ளவும். தேவையென்றால் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் / நெய் சேர்த்துச் சூடானதும். சிறிய குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயின் நடுவில் ஊற்ற வேண்டும். ஒவ்வொன்றாகத் தான் ஊற்ற வேண்டும். அப்பம் மேலே வந்தவுடன் அதை லேசாகத் திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து எண்ணெயை வடியவிடவும். மெத்தென்று இருக்கும்போதே எடுத்து விட வேண்டும். மொத்த மாவினையும் இதேபோல செய்ய வேண்டும். முந்திரி அப்பம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்