பலாக்கொட்டை காரப்போளி
2022-05-02@ 17:44:42

தேவையானவை:
பலாக் கொட்டை - 20,
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
ஓமம் - 1 டீஸ்பூன்,
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 5 டேபிள் ஸ்பூன்,
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்,
பொடியாக அரிந்த மல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் - 10 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பலாக்கொட்டையை நீர்விட்டு வேகவிட்டு அதிகப்படியாக நீர் இருந்தால் வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுற்றிய பலாக்கொட்டை போட்டு அனைத்துப் பொருட்களையும் சேர்த்து எண்ணெய் மட்டும் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து மாவினை உருட்டி போளியாகத் தட்டி தவாவில் போட்டு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு புறமும் வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவினையும் இதுபோல் போட்டு எடுக்கவும். அடுப்பினை சிம்மில் வைத்து சாப்ஃட்டாக இருக்குமாறு எடுக்கவும்.
Tags:
பலாக்கொட்டை காரப்போளிமேலும் செய்திகள்
பீட்ரூட் ஆலு கட்லெட்
பச்சைப் பட்டாணி காளான் சுக்கா
புதினா மயோனைஸ்
கேரட் பஜ்ஜி
பீட்ரூட் பக்கோடா
தாமரைதண்டு வறுவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!