பலாப்பழ கேசரி
2022-04-29@ 17:57:50

தேவையானவை :
கெட்டி அவல் - 1 கப்,
நெய் - 8 டேபிள் ஸ்பூன்,
பொடியாக அரிந்த பலாச்சுளைகள் - ¼ கப்,
லெமன் புட் கலர் - ¼ டீஸ்பூன்,
சர்க்கரை - 1 கப்,
உடைத்த முந்திரித் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
வில்லைகளாக அரிந்த வாழைப்பழம் - 2 டேபிள் ஸ்பூன்,
அரிந்த ஆப்பிள் துண்டுகள் - 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, முந்திரித்துண்டுகளை வறுத்துத் தனியே வைக்கவும். மீதியுள்ள நெய்யை ஊற்றி அவலை வறுத்து 1 கப் நீர் ஊற்றி வேகவிடவும். அவல் குழையாமல் வெந்ததும் சர்க்கரைச் சேர்த்து புட்கலர் சேர்த்து சர்க்கரை கரைந்து வெந்ததும் பலா, ஆப்பிள், வாழைப்பழங்களைச் சேர்த்து இறக்கவும். சூட்டிலேயே பழங்கள் வெந்துவிடும். நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும். சுவையான அவல் பலாப்பழ கேசரி தயார்.
Tags:
பலாப்பழ கேசரிமேலும் செய்திகள்
மைதா மில்க் பர்பி
கருப்பட்டி மிட்டாய்
ரோஜா பூ புட்டிங்
ரோஜா பூ ஜாம்
தம் ரூட் அல்வா
வெள்ளரிக்காய் பாயசம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!