திண்டுக்கல் பிரியாணி
2022-04-28@ 18:01:34

தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 1 கிலோ.
ஆட்டுக்கறி - 1 கிலோ.
இஞ்சி, பூண்டு விழுது- 200 கிராம்.
பட்டை - 10 கிராம்.
கிராம்பு - 10 கிராம்.
ஏலக்காய் - 10 கிராம்.
பிரிஞ்சி இலை- 10 கிராம்.
ஜாதிப்பத்திரி - 10 கிராம்.
பச்சை மிளகாய் - 10.
காய்ந்த மிளகாய் (வற்றல்) - 10.
பெரிய வெங்காயம் - 200 கிராம.
சின்ன வெங்காயம்- 100 கிராம்.
புதினா - 2 கப்.
கொத்தமல்லி- 2 கப்.
முந்திரி - தேவையான அளவு.
எண்ணெய் - 100 மி.லி.
நெய்- 100 மி.லி.
தயிர்- 1 கப்.
பக்குவம்:
அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிப்பத்திரி ஆகியவற்றை அரைத்து பொடியாக்கி அதில் தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினாவை தலா ஒரு கைப்பிடி எடுத்து தனியாக அரைத்து விழுதாக்க வேண்டும். அதேபோல் சின்ன வெங்காயத்தை விழுதாக அரைத்து, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி, ஊறவைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிப்பத்திரி பொடி, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறவேண்டும்.
பின்னர் சின்ன வெங்காய விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகாய் விழுது, கொத்தமல்லி, புதினா விழுது என்று வரிசையாக ஒவ்வொன்றையும் போட்டு நன்கு கிளற வேண்டும். பின்னர், கழுவி சுத்தம் செய்த ஆட்டுக்கறித் துண்டுகளைக் கொட்டி கிளறிவிட வேண்டும். இப்போது அடுப்பில் தீ நன்றாக பாத்திரம் முழுவதும் எரிய வேண்டும். இறைச்சியில் மசாலா சேர்ந்ததும் தேவையான அளவு தயிர், கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள், கல் உப்பு ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து ஊற்ற வேண்டும் (ஐந்து பங்கு அரிசிக்கு 8 பங்கு தண்ணீர்). நன்றாகக் கொதித்ததும் அரிசியை அதில் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றத் தொடங்கியதும் கனமான மூடியில் 15 நிமிடம் தம்மில் வைத்து இறக்க வேண்டும்.
Tags:
திண்டுக்கல் பிரியாணிமேலும் செய்திகள்
மட்டன் கொத்துகறி அடை
முட்டை பர்கர்
மட்டன் க்ரீன் கறி
சிக்கன் மலாய் டிக்கா
முட்டை பாண் பிரியாணி
வஞ்சர மீன் ஃப்ரை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்