SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு கதம்பச் சட்னி

2022-04-26@ 18:00:28

தேவையானவை:

கொத்தமல்லி தழை - அரை கப்
புதினா இலை - அரை கப்
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 4
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - 20 இலைகள்
புளி - நெல்லிக்காய் அளவு

தாளிக்க:


எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்


பக்குவம்:

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின்பு இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும். அதன்பின்பு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி ஆகியவற்றுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும். வதங்கியபின்பு புளி மற்றும் தேங்காயினைச் சேர்த்து ஒருமுறை வதக்கி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். வேண்டிய அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஆறியதை உரலில் ஆட்டி எடுத்தாலும் சரி, மிக்சியில் அரைத்து எடுத்தாலும் சரிதான். அரைத்த சட்னியில், கடுகு தாளித்து ஊற்றினால் மணக்க மணக்க, சுவையான செட்டி நாட்டு கதம்பச் சட்னி தயார். வெள்ளைப் பணியாரத்துக்கு இதுதான் சரியான ஜோடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்