SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பன்னீர்

2022-04-20@ 17:57:35

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன்/கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

மைதா - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பின் அதில் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பன்னீரைப் போட்டு ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி பன்னீர் ரெடி!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்