SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோட்டுக்கடை காளான்

2022-04-12@ 18:04:02

தேவையான பொருட்கள் :

முட்டைக்கோஸ் - 2 கப்
காளான் - 2 கப்
மைதா - 1 கப்
சோள மாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - டேபிள் ஸ்பூன்
உப்பு - தே. அளவு
எண்ணெய்- வறுக்க

வதக்க :

வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 2
மஞ்சள் - 1 tsp
மிளகாய் தூள் - 2 tsp
கரம் மசாலா - 1 tsp
தனியா தூள் - 1 tsp
உப்பு - சிறிதளவு
சோளமாவு - 1 tsp


செய்முறை :

முதலில் காளான், கோஸ் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் அதில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள் என மிக்ஸிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸ் செய்து 5 நிமிடம் ஊற வைக்கவும். பின் எண்ணெய் காய வைத்து அதில் இந்த மிக்ஸிங்கை பக்கோடா போல் வறுத்து எடுக்கவும். பின் கடாய் வைத்து அதில் வதக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். தக்காளி அரைத்து போட வேண்டும். சோள மாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து ஊற்றவும். மசாலா நன்கு மிக்ஸானதும் வறுத்து வைத்துள்ள காளானை போட்டு பிரட்டவும். வறுத்த காளான் மிக்ஸிங்கை முழுதாக போடாமல் உடைத்து போடவும். அவ்வளவுதான் காளான் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்