SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செட்டிநாடு சாம்பார்

2022-04-11@ 18:04:45

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - அரை கப்
சாம்பார் காய்கறிகள் - 200 கிராம்
சிறிய வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - 2
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பெருங்காயம்
வெந்தயம்
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை


செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு 1 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். 2 சிட்டிகை மிளகாய் தூள், மூன்று சிட்டிகை சாம்பார் தூள், ஒரு சிட்டிசை பெருங்காயம், ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும், பிறகு தயார் செய்து வைத்திருந்த மசாலாவுடன் நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை சேர்க்கவும். பிறகு ஊற வைத்த துவரம்பருப்பை அந்த காய்கறியுடன் சேர்த்து நன்றாக கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை நன்றாக மூடி நான்கு – முதல் ஐந்து விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். பிறகு தனியாக ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து சாம்பாரில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். சுவையான ஈசியான சாம்பார் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்