இறால் முட்டை பொடிமாஸ்
2022-04-11@ 18:00:37

தேவையான பொருட்கள் :
இறால் - 250 கிராம்
கடுகு - 1 tsp
எண்ணெய் - 2 tsp
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 tsp
குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தே. அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து தனியே வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்கவும். அடுத்ததாக கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள இறால் போடவும். அதோடு மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிறட்டவும்.
சிறு தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். தண்ணீர் ஊற்றக் கூடாது. நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கவும். முட்டை தேவைப்பட்டால் மேலும் ஒன்று சேர்க்கலாம். அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். இறுதியாக் கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான இறால் முட்டை பொடிமாஸ் தயார்.
Tags:
இறால் முட்டை பொடிமாஸ்மேலும் செய்திகள்
மட்டன் கொத்துகறி அடை
முட்டை பர்கர்
மட்டன் க்ரீன் கறி
சிக்கன் மலாய் டிக்கா
முட்டை பாண் பிரியாணி
வஞ்சர மீன் ஃப்ரை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்