SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் கீமா பிரியாணி

2022-04-04@ 18:04:50

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ (கொத்திய கறி)
வெங்காயம் - 1
தக்காளி - 1
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி,
பூண்டு விழுது - 3 ஸ்பூன்
பிரியாணி இலை, பட்டை - சிறிது
தயிர் - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
பாசுமதி அரிசி - 3 கப்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
உப்பு,
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி


செய்முறை :

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனிடையே சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதில், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும். இறுதியாக உப்பு, தேவையான தண்ணீர்சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதனுடன் பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். வெந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான சிக்கன் கீமா பிரியாணி ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்