வாழைக்காய் சிப்ஸ்
2022-03-31@ 17:58:48

தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்
1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1/4 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
1/4 மேஜைக்கரண்டி சீரக தூள்
ஒரு கை அளவு கருவேப்பிலை
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
முதலில் 2 வாழைக்காயை எடுத்து தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும். 40 நிமிடத்திற்கு பிறகு வாழைக்காயை எடுத்து அதை ரவுண்டாக சீவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (வாழைக்காயை அப்படியே எண்ணெயின் மேலே வைத்து சீவி விட பழக்கப்பட்டவர்கள் நேரடியாகவும் வாழைக்காயை சீவி விடலாம். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் சீவி வைத்திருக்கும் வாழைக்காயை கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக எண்ணெயில் போடவும்.
பின்பு ஒரு கரண்டியின் மூலம் அதை நன்கு திருப்பி விட்டு கொண்டே இருக்கவும் அப்போது தான் அனைத்து புறங்களிலும் அது நன்றாக வெந்து வரும். வாழைக்காய் சிப்ஸ் நன்கு வெந்ததும் அதை கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு bowl ல் போடவும். மீதமுள்ள வாழைக்காயை போட்டு பொரித்து எடுப்பதற்கு முன் எண்ணெய்யை சூடான பதத்திற்கு கொண்டு வருவதற்கு சிறிது நேரம் அதை சுட விடவும். எண்ணெய் சுடுவதற்குல் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதில் சீரக தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
மொத்தமாக பொரித்து எடுத்த பின் மசாலாவை அதில் சேர்ப்பதை தவிர்க்கவும் ஏனென்றால் சூடாக இருக்கும் போதே அதில் மசாலாக்களை போட்டால் தான் மசாலா நன்கு சிப்ஸ்சோடு சேரும். அடுத்து எண்ணெய் சூடான பதத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னர் மீதமுள்ள வாழைக்காய்களை நாம் முன்பு செய்தது போன்ற எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து மசாலாக்களை தூவி நன்கு கலந்து விடவும். சிப்ஸுகளை பொரித்து எடுத்த பின்பு கருவேப்பிலையை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை உடனடியாக அணைத்து விட்டு கருவேப்பிலை நிறம் மாறுவதற்குல் அதை எடுத்து சிப்ஸ் உடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிப்ஸை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார்.
Tags:
வாழைக்காய் சிப்ஸ்மேலும் செய்திகள்
பீட்ரூட் ஆலு கட்லெட்
பச்சைப் பட்டாணி காளான் சுக்கா
புதினா மயோனைஸ்
கேரட் பஜ்ஜி
பீட்ரூட் பக்கோடா
தாமரைதண்டு வறுவல்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;