அத்திப்பழ அல்வா
2022-03-24@ 17:52:28

தேவையான பொருட்கள்:
250 கிராம் நனைத்து அத்திப்பழம்
200 கிராம் கோயா
தேவையான அளவு சீனி
தேவையான அளவு கருப்பு ஏலக்காய்
1 stick இலவங்கப்பட்டை
தேவையான அளவு நீர்
தேவையான அளவு உலர் பழ கலவை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய்யை சேர்த்து ஏலக்காய், இலவங்கப் பட்டையை வறுக்கவும். பிறகு மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை அவற்றோடு நீரில் ஊறவைத்த அத்திப் பழங்களைச் சேர்த்து நன்கு கிளறவும். அத்தியை ஊறவைத்த நீரை அவற்றோடு சேர்த்து அத்தி மிருதுவாக வரும் வரை வதக்கவும். பின் சர்க்கரையையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நன்கு கிளறவும். அத்திப் பழங்களைக் கரண்டியால் நன்கு குழைக்கவும். அல்வா நன்கு சுண்டி வரும்வரை காத்திருக்கவும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்த பிறகு கோயாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
5 நிமிடங்களுக்கு அவற்றை அடுப்பில் இருக்க விடுங்கள். பின் அல்வாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். ஆறும்போதே உலர்ந்த பழ வகைகளை அதனோடு சேர்க்கவும். பின் கிண்ணத்தில் போட்டு சாப்பிட பரிமாறலாம். இதன் மற்றொரு சிறப்பு என்னவெனில் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதத்திற்கு மேல் கூட குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு என்ன யோசனை பாத்திரத்தை எடுங்க. அல்வாவை ருசிங்க.
Tags:
அத்திப்பழ அல்வாமேலும் செய்திகள்
மைதா மில்க் பர்பி
கருப்பட்டி மிட்டாய்
ரோஜா பூ புட்டிங்
ரோஜா பூ ஜாம்
தம் ரூட் அல்வா
வெள்ளரிக்காய் பாயசம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!