SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்ரூட் ஐஸ்கிரீம்

2022-03-17@ 18:01:36

தேவையானவை:

300 கிராம் பீட்ரூட்
25 கிராம் இஞ்சி நறுக்கியது
1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
90 மில்லி பால்
250 மில்லி புதிய கிரீம்
10 சொட்டு வெண்ணிலா எசன்ஸ்
1 முட்டை (தேவைப்பட்டால்)
75 கிராம் சர்க்கரை


செய்முறை:

பீட்ரூட் மற்றும் இஞ்சி ஆகிய வற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஜூஸ் எடுக்க வேண்டும்.அரித்த ஜூஸ் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம் சேர்த்து நன்றாக பீட் செய்யவும், அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும். அதில்  திக்கான பீட்ரூட் ஜூஸ், பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு ஐஸ் கிரீம் அச்சு அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி 3 மணி நேரம்  பிரீஸரில்வைக்கவும். பிறகு அதை எடுத்து மீண்டும் பீட் செய்து பிரீஸரில் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை வைக்கவும். இப்போது அதை எடுத்து முந்திரி, பாதாம், தேன் போட்டு பரிமாறலாம். சுவையான பீட்ரூட் ஐஸ்கிரீம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்