SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பின் வீல் சமோசா

2022-03-04@ 17:56:47

தேவையானவை:
 
உருளைக்கிழங்கு - 2
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மசாலா செய்முறை

உருளைக்கிழங்கைக் குக்கரில் நான்கு விசில் வரும் வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் தோலுரித்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் அதில் இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். பின்னர் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து
இறக்கவும்.


பக்குவம்:

கூம்பு சமோசாவுக்குக் குறிப்பிட்டுள்ள மாவில் ஆரஞ்சு பழ அளவில் உருண்டை எடுத்துக்கொண்டு உருட்டிக்கொள்ளவும். பின்னர் சிறிது மைதா மாவு தூவி பெரிய வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். அதில் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவைச் சமமாகப் பரப்பி வைக்கவும். பின்னர் ஓரங்களில் இருந்து ரோல் செய்து உருட்டிக்கொள்ளவும். ஒரு கத்தியால் அரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து காயவிடவும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவுடன் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். இப்போது நறுக்கிய வட்டங்களை மைதா கரைசலில் இரண்டு பக்கமும் நன்கு தோய்த்து எண்ணெயில் போடவும். சிறிது நேரம் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு பொன்னிறமாக மாறியதும் தட்டில் மாற்றிக்கொள்ளவும். புதினா கொத்தமல்லிச் சட்னி வைத்து சூடாகப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்