SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்பு சோமாஸ்

2022-02-01@ 15:01:31

தேவையான பொருட்கள்:

ரவை (அ) மைதா மாவு - அரை கிலோ
சர்க்கரை - 1 கிலோ
வறுகடலை - அரை கிலோ
தேங்காய் - 3
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு


செய்முறை:

வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக் கொள்ளவேண்டும். தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும். ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.

பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும்.

பின்னர் பூரணம் வைத்துள்ள பகுதிக்கு வெளியே உள்ள அதிகப்படியான மாவை வெட்டி எடுத்தால் ஒரு அழகான வடிவத்தில் வரும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சி, அதில் பொரித்து வைத்துள்ள சோமாசுகளை நனைத்து எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tailllo111

    நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

  • glass-park-29

    ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

  • america_tra11

    அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்