SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறால் மஞ்சூரியன்

2022-01-24@ 18:01:38

தேவையானவை:

இறால்(சுத்தம் செய்தது) - 200 கிராம்,
கார்ன் மாவு - 1 ஸ்பூன்,
மைதா மாவு - 1 ஸ்பூன்,
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
குடை மிளகாய் - 1,
வெங்காயத்தாள் - 2 கொத்து,
பூண்டு - 10,
சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
சில்லி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
டொமெட்டோ சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு தூள் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - 1 ஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு மற்றும் ஊறவைக்க தேவையான பொருட்களோடு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயதாளையும் நறுக்கிக் கொள்ளவும். இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும். பின் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் சேர்த்து வைத்து நன்றாக வதக்கவும். பிறகு அதில், இந்த கலவைக்கு மட்டும் தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

  • nepallumbii

    நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

  • ooty-rose-exhi-14

    50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

  • odisha_park

    இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்