SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் நூடுல்ஸ்

2022-01-21@ 17:54:17

தேவையான பொருட்கள்

கோழிகறி – ½ கிலோ
நூடுல்ஸ் – 500 கிராம்
கேரட் – 1
வெங்காயம் – 2
பீன்ஸ் – சிறிதளவு
முட்டைகோஸ் – சிறிதளவு
பச்சைமிளகாய் -2
முட்டை – 2
மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி
மிளகுதூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயத் தாள் – சிறிதளவு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி


செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கோழிக்கறி சேர்த்து வேக வைத்து கொள்ளவும். சிக்கன் வெந்ததும் எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். பிறகு தோல், எலும்புகளை நீக்கி சதை பகுதியை மட்டும் பிரித்து வைத்து கொள்ளவும். சிக்கனுடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி அரை மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும்.காய் வகைகளை மெல்லியதாக சீவி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டி வைத்த சிக்கனை போட்டு நன்கு சிவக்கும் அளவுக்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். நூடுல்ஸை சுடு தண்ணீரில் போட்டு 20 நிமிடம் வேக வைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி வெங்காயத்தை பொட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதனுடன் காரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து நன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் மசாலா பொடிகள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். இப்போது வேக வைத்த நூடுல்ஸ், பொரித்த சிக்கன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும். சிறிது வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி கொள்ளவும். இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்