கலாகன்ட்
2022-01-21@ 14:57:33

தேவையான பொருட்கள்
பன்னீர் செய்ய
பால் - 500 மில்லி
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்
தண்ணீர்
கலாகன்ட் செய்ய
பால் - 1 லிட்டர்
செய்த பன்னீர்
நெய் - 1/2 கப்
சர்க்கரை - 1 கப்
குங்கும பூ
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
பிஸ்தா
பாதாம்
மேலன் விதைகள்
செய்முறை
பன்னீர் செய்ய
பாத்திரத்தில் பாலை கொதிக்கவிடவும். இதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பால் முழுமையாக திரிந்தும், வடிகட்டவும். எலுமிச்சை பழத்தின் புளிப்பை நீக்க, தண்ணீர் ஊற்றி லேசாக அலசவும்.
கோவா செய்ய
அகல பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்கவிடவும். பாலின் அளவு குறையும் வரை கொதிக்கவிடவும். கைவிடாமல் கிண்டவும். பால் நன்கு குறைந்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
கலாகன்ட் செய்ய
நன்கு குறைந்துள்ள பாலில், செய்த பன்னீர்'ரை போடவும். இருக்கும் ஈரம் வற்றும் வரை கிண்டவும். இதில் நெய் சேர்த்து, குறைந்த தீயில் கிண்டவும். அடுத்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை உருகிய பின், இதில் குங்கும பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். கலாகன்ட் கலவை நிறம் மாறும் வரை கிண்டவும். கலாகன்ட் கலவை தயார். டின்'னில் நெய் தடவி, கலாகன்ட் கலவை சூடாக இருக்கும் பொழுதே போடவும். சமம் செய்து, மேலே நெய் தடவவும். இறுதியாக இதில் பிஸ்தா, பாதாம், மேலன் விதைகள் நறுக்கி தூவவும். இதை 2 மணி நேரம் வைக்கவும்.
Tags:
கலாகன்ட்மேலும் செய்திகள்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!