ஐஸ் கிரீம் சுய்யம்
2022-01-04@ 17:53:43

தேவையானவை:
மைதா - 500 கிராம்
பால் - 100 கிராம்
ஏலக்காய் - 5
வெனிலா ஐஸ்கிரீம் - 125 மி.லி.
சாமை அரிசி - 100 கிராம். (மேல் மாவிற்கு)
வெல்லம் - 500 கிராம்
தேங்காய் - துருவியது.
பக்குவம்:
ஐஸ்கிரீமை சிறு உருண்டைகளாக ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைத்து கட்டிகள் போல தயாரித்துக்கொள்ள வேண்டும். அதாவது இளகிய கட்டிபோல சிறு துண்டாக இறுகி இருக்க வேண்டும். மைதா, சாமை அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து பஜ்ஜி பதத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டும். வெல்லத்தை பாலுடன் சேர்த்து கரைத்து தனியாக வடிகட்டி கொள்ளலாம். இந்த கலவையில் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
தனியாக தேங்காய் எண்ணெயை வாணலில் காய வைத்து ஐஸ்கிரீம் கட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து தயாரித்துள்ள மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். பத்து வினாடிகள் இருந்தாலே போதும் மாவு வெந்து விடும். அதைத் தாண்டும் போது ஐஸ்கிரீம் கட்டிகள் உருக ஆரம்பித்துவிடும். அதே போல ஒவ்வொரு முறையும் ஐஸ்க்ரீம் கட்டிகளை உருகாமல் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுஷ்யம் செய்ய பயன்படுத்த வேண்டும்.
Tags:
ஐஸ் கிரீம் சுய்யம்மேலும் செய்திகள்
மேங்கோ ஐஸ்க்ரீம்
பீட்ரூட் ஐஸ்கிரீம்
பாதாம் செர்ரி குல்ஃபி
வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்
தேன் ஐஸ்கிரீம்
சாக்லேட் மூஸ்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்