காலிஃப்ளவர் சூப்
2021-12-28@ 17:52:26

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் 1 கப்,
காலிஃப்ளவர் தண்டு 1 கப்,
பால் 3 கப்,
நெய் 3 தேக்கரண்டி,
மைதா 2 தேக்கரண்டி,
எண்ணை 1 தேக்கரண்டி,
உப்பு தேக்கரண்டி,
வெங்காயம் 1,
மிளகு தேக்கரண்டி,
பூண்டு 6 பல்.
செய்முறை:
காலிஃப்ளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக சூடேறியதும் எடுத்து ஆற விடுங்கள். பிறகு முன்னதாக தயாரித்து வைத்து இருந்த காலிஃப்ளவர் மசியலை எடுத்து கலக்கி மீண்டும் சூடுபடுத்தவும். இப்போது மேலும் ஒரு கப் தண்ணீர், ஒரு கப் பாலை கலக்கவும். காலிஃப்ளவர் சூப் ரெடி.
Tags:
காலிஃப்ளவர் சூப்மேலும் செய்திகள்
கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ்
கோதுமை ஃபலூடா
ஈரல் மாங்காய் சூப்
ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி
காளான் தேங்காய் பால் சூப்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!