கம்பு கொழுக்கட்டை
2021-12-27@ 18:05:19

தேவையான பொருட்கள்:
கம்பு – 1 கப்
தேங்காய்,
பொடியாக பற்களாக அறிந்தது – 3 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி,
பொடியாக நறுக்கியது – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 3 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
செய்முறை:
கம்பை குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் ஒரு சுத்தமான துணியில் பரப்பி வைக்கவும். தண்ணீர் உறிஞ்சியவுடன், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம், கருவேப்பில்லை தாளிக்கவும். பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 1 & 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, கொதிக்க விடவும். கொதி வந்தவுடன், அரைத்த கம்பு மாவு சேர்த்து, மிதமான தீயில் மூடி வேக வைக்கவும்.
4 நிமிடம் வெந்தவுடன், ஆற வைக்கவும். மூடி வைத்தால் காய்ந்துபோகாமல் இருக்கும். வெதுவெதுப்பாக ஆனவுடன் கைகளில் நல்லெண்ணெய் தடவி, பிடி கொழுக்கட்டைகளாக பிடிக்கவும் ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கொழுக்கட்டைகளை வைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும். எப்பொழுதும் மூடி வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும்.
Tags:
கம்பு கொழுக்கட்டைமேலும் செய்திகள்
கருப்பட்டி சம்பா அவல்
கொள்ளு - கண்டந்திப்பிலி ரசம்
கீழாநெல்லி ஜூஸ்
சிவப்பரிசி அவல் ஃபரூட் சாலட்
மணத்தக்காளி பச்சடி
வேப்பம்பூ பச்சடி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்