மாங்காய் மட்டன் பிரட்டல்
2021-12-22@ 18:01:03

தேவையானவை:
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்
மட்டன் - 200 கிராம்
இஞ்சி விழுது - 60 கிராம்
பூண்டு விழுது - 60 கிராம்
கரம் மசாலாத் தூள் - 20 கிராம்
மிளகாய்த்தூள் - 15 கிராம்
பச்சை மிளகாய் - 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)
நல்லெண்ணெய் - 10 மில்லி
மஞ்சள்தூள் - 10 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 30 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
மாங்காய் - கால்பகுதி மாங்காய் (நறுக்கவும்)
செய்முறை:
பிரஷர் குக்கரில் மட்டன், இஞ்சி விழுது, பாதியளவு பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். தனியே ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மீதமுள்ள பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் பச்சை மிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் போட்டு வதக்கி, கடைசியில் வேக வைத்த மட்டனைப் போட்டுப் புரட்டி அடுப்பை அனைத்து இறக்கி பரிமாறவும்.
Tags:
மாங்காய் மட்டன் பிரட்டல்மேலும் செய்திகள்
நெத்திலி மீன் தொக்கு
மலபார் சிக்கன் ரோஸ்ட்
கொத்துக்கறி பிரட்டல்
திண்டுக்கல் பிரியாணி
தஹி கபாப்
பூண்டு இறால்
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!