ஜவ்வரிசி கோதுமை ரவை அடை
2021-12-15@ 18:01:35

தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி – ஒரு கப்,
கோதுமைரவை– அரை கப் ,
அரிசி மாவு,
கேரட் துருவல் – தலா அரை கப்,
வெங்காயம் – 4,
இஞ்சி,
பச்சை மிளகாய் – தேவையான அளவு,
தேங்காய் துருவல் – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், கோதுமைரவை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து கொட்டிய பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இப்போது ரவை நன்றாக ஊறி மாவு கொட்டியான பதத்தில் இருக்கும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
Tags:
ஜவ்வரிசி கோதுமை ரவை அடைமேலும் செய்திகள்
கருப்பட்டி சம்பா அவல்
கொள்ளு - கண்டந்திப்பிலி ரசம்
கீழாநெல்லி ஜூஸ்
சிவப்பரிசி அவல் ஃபரூட் சாலட்
மணத்தக்காளி பச்சடி
வேப்பம்பூ பச்சடி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!