வெண்ணெய் புட்டு
2021-12-14@ 18:03:59

தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒரு கப்,
வெல்லம் - ஒரு கப்,
கடலைப்பருப்பு - கால் கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
பால் - 200 மில்லி,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
வெண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊற வைத்து... நைஸாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இளம் பாகாகக் காய்ச்சவும். வெல்லப் பாகில் பாலை ஊற்றி, கொதித்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்த்து நன்கு கிளறவும். மாவு சற்றே வெந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் உப்பு சேர்க்கவும். முழுவதுமாக வெந்தவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கவும். ஒரு பெரிய தட்டு எடுத்து அதில் வெண்ணெயைத் தடவி, செய்து வைத்திருக்கும் கலவையை அதில் போடவும். ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
Tags:
வெண்ணெய் புட்டுமேலும் செய்திகள்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!