SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பட்டி ஜாமூன்

2021-12-08@ 17:24:08

தேவையானவை:

பிரெட் - 12 துண்டுகள்,
கருப்பட்டி - 500 கிராம்,
பால் - அரை லிட்டர்,
கண்டென்ஸ்டு மில்க் - 100 கிராம்,
நறுக்கிய பாதாம்,
முந்திரி,
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
நெய் - தேவையான அளவு.


செய்முறை:

ஓரங்களை நீக்கி பிரெட் துண்டுகளை உதிரியாக்கி அதில் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கண்டென்ஸ்டு மில்க்குடன் சேர்த்து, கோதுமை மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும்.  பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி, வாணலியில் நெய்யை ஊற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூளை தூவவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் சேர்த்து, நறுக்கி வைத்த பாதாம் மற்றும் முந்திரியை மேலே தூவவும். கருப்பட்டி பாகில் இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு எடுத்துச் சாப்பிட்டால் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

  • republic20222

    டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்