ராகி பக்கோடா
2021-12-07@ 17:47:08

என்னென்ன தேவை?
ராகி மாவு,
மஞ்சள் தூள்,
சோள மாவு தலா - 1 கப்,
மிளகாய்த்தூள் 11/2 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சி - தலா 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - தேவைக்கேற்ப,
உடைத்த வேர்க்கடலை - 1/2 கப்,
பொட்டுக்கடலை மாவு (அ) கடலை மாவு - 1/2 கப்,
உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2.
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இத்துடன் ராகி மாவு, சோள மாவு, கடலை மாவு அல்லது பொட்டுக்கடலை மாவு (ஏதாவது ஒன்று) சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், சூடான 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். இத்துடன் பொடித்த வேர்க்கடலை சேர்த்து பிசைந்து உதிர் உதிராக மாவு இருக்க வேண்டும். (பக்கோடா பதத்தில்) எண்ணெயை காயவைத்து கலந்து வைத்துள்ள மாவை பக்கோடாவாக பொரித்து எடுக்கவும். ராகி பக்கோடா கரகரப்பாக இருக்கும். வேர்க்கடலைக்கு பதில் முந்திரிப் பருப்பும் சேர்க்கலாம்.
Tags:
ராகி பக்கோடாமேலும் செய்திகள்
கருப்பட்டி சம்பா அவல்
கொள்ளு - கண்டந்திப்பிலி ரசம்
கீழாநெல்லி ஜூஸ்
சிவப்பரிசி அவல் ஃபரூட் சாலட்
மணத்தக்காளி பச்சடி
வேப்பம்பூ பச்சடி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!