முட்டை பப்ஸ்
2021-12-01@ 17:56:13

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 2 கப்
உப்பு - 1/2tsp
வெண்ணெய் - 150 கிராம்
பூரணம் வைக்க :
எண்ணெய் - 2 tsp
வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் - 1/2 tsp
கரம் மசாலா - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
தனியா தூள் - 1 tsp
உப்பு - தே. அளவு
முட்டை - 4
செய்முறை:
மைதாவை உப்பு போட்டு தளதளவென பிசைந்து ஈரட்துணி கொண்டு மூடி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இதற்கிடையே பூரணம் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் பிசைந்து வைத்துள்ள மாவை ஒரே மாவாக அப்படியே வைத்து சப்பாத்தி போல் உருட்டவும்.. நன்கு பெரிய வட்டமாகப் மெலிதாக உருட வேண்டும். பின் இரண்டு மடிப்பாக மடித்து அதில் ஒரு ஸ்பூன்வெண்ணெய் தடவி மீண்டும் மடித்து உருட்டவும். இப்படி ஒவ்வொரு மடிப்பாக உருட்டி கைக்குட்டை போல் சிறு கட்டம் வரும் வரை மடித்து மடித்து பிசைந்து கொண்டே இருங்கள். அப்படி வந்ததும் தற்போது மீண்டும் பெரிய கட்டமாக உருட்டவும்.
உருட்டியதும் கத்தியால் உங்களுக்கு தேவையான அளவில் மாவின் இடையே கோடுகள் கிழிக்கவும். அதுதான் பூரணம் வைத்து மடிக்கப்போகும் கோடுகள். அப்படி கிழித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள பூரணங்களை ஒரு கரண்டி வைத்து அதன் மேல் வேக வைத்த முட்டையின் ஒரு பாதியை வைத்து நான்கு பக்கங்களையும் மடித்து இணைக்கவும். அவை பிரியாதவாறு இணைக்க வேண்டும். அடுத்ததாக குக்கரின் அடியில் எண்ணெய் தடவி பப்ஸ் மீதும் எண்ணெய் தடவி குக்கரில் வைக்கவும். சூடானதும் மூடிவிடுங்கள். விசில் வைக்க வேண்டாம். 10 நிமிடங்கள் கழித்து மறுபுறமும் பிறட்டி எடுக்கவும். இவ்வாறு செய்ய பப்ஸ் நன்கு வெந்திருக்கும். எடுத்து பரிமாறலாம். சுவைக்கலாம்.
Tags:
முட்டை பப்ஸ்மேலும் செய்திகள்
மலபார் சிக்கன் ரோஸ்ட்
கொத்துக்கறி பிரட்டல்
திண்டுக்கல் பிரியாணி
தஹி கபாப்
பூண்டு இறால்
இறால் முட்டை பொடிமாஸ்
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!