சோள சூப்
2021-11-25@ 17:59:17

தேவையானவை:
முழு சோளம் 1,
தக்காளி 2,
பச்சை மிளகாய் 1,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் 1 கப்,
உப்பு தேவைக்கேற்ப,
மஞ்சள்தூள் சிட்டிகை.
தாளிக்க:
நெய் 2 டீஸ்பூன்,
சோம்பு அரை டீஸ்பூன்,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்தூள் 1 சிட்டிகை.
செய்முறை:
தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை வகுந்துகொள்ளவும். சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதிலிருக்கும் நீரை மட்டும் வடிகட்டி, சக்கையை எடுத்துவிடவும். ஒரு வாணலியில் நெய் விட்டு, சோம்பு, ஏலக்காய்தூள் போட்டு தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பருப்பு வேகவைத்த தண்ணீரையும் அதில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, சோளம் அரைத்து வடிகட்டிய தண்ணீரையும் சேர்க்கவும். அத்துடன் மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். பிரஷர் போனதும் திறந்து சூடாகப் பரிமாறவும். செட்டிநாட்டுக் கல்யாண விருந்தில் பிரபலமான சூப் இது.
Tags:
சோள சூப்மேலும் செய்திகள்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்