பீர்க்கங்காய் முட்டை பொரியல்
2021-11-23@ 17:58:20

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் - 1 கப்
முட்டை -3
பெப்பர் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/4 கப்
சிவப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் கட்பண்ணி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பீர்க்கங்காய் நன்கு வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிதமான சூட்டில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் சிறிது பெப்பர் மற்றும் கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கினால், பீர்க்கங்காய் முட்டை பொரியல் தயார் .
மேலும் செய்திகள்
பலாக்கொட்டை காரப் பொரியல்
கொத்தவரைப் பொரியல்
பூசணி அவியல்
குடைமிளகாய் பொரியல்
ப்ரோக்கோலி பொரியல்
வாழைப்பூ பொரியல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை