SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹனி கார்லிக் சிக்கன்

2021-10-21@ 18:04:27

தேவையானவை:

போன்லெஸ் சிக்கன் அல்லது
சிக்கன் பிரெஸ்ட் - அரை கிலோ
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தேன் - 5 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் - 4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் / மிளகாய் ஃபிளேக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்  
கான்ஃப்ளார் - அரை கப்
மைதா மாவு - முக்கால் கப்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்,
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

சோயா சாஸ், மிளகாய்த்தூள் / மிளகாய் ஃபிளேக்ஸ், தேன், சர்க்கரை, 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர், டொமேட்டோ கெட்சப் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து ஊற்றி,  கான்ஃப்ளார், மைதா மாவு, பேக்கிங் பவுடர், அரை கப் தண்ணீர் சேர்த்து, 10  நிமிடங்கள் ஊற வைக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 10  நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு பானில் (pan) எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் கலவையைப் போட்டு லேசாக பொன்னிறமானதும் இதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் சிக்கனைப் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.  ஒரு பானில் தேன் கலவையை ஊற்றவும். இந்த சாஸ் கெட்டியாகும் வரை  அல்லது ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதில் பொரித்தெடுத்த சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு கலக்கவும். வெள்ளை எள்ளைத் தூவிப்  பரிமாறவும். இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி என்ற பெயர் தோன்றியது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

  • china_taiwan

    தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!

  • guinness-record-pull-ups-08

    பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!

  • egypt-sun-temple-8

    எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்