பனீர் ஜிலேபி
2021-10-21@ 17:55:55

தேவையானவை:
பனீர் - 150 கிராம்
சர்க்கரை - அரை கப்
கேசரி கலர் - ஒரு சிட்டிகை
மைதா - 4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 2
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்துப் பாகு தயாரிக்கவும். பாகு கெட்டியான கம்பி பதம் வந்த பிறகு அரை சிட்டிகை கேசரி கலர் (அல்லது குங்குமப்பூ) சேர்க்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் பனீரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும் அத்துடன் மைதா, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரை சிட்டிகை கேசரி கலர் (அல்லது குங்குமப்பூ) சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடான பின் பனீர் கலவையை ஜிலேபியாகப் பிழிந்து எடுக்கவும்.மிதமான தீயில் ஜிலேபி பிழியவும். இல்லையென்றால் உடைந்துவிடும். ஜிலேபி நன்கு வெந்து, பொன்னிறமாக மாறியதும் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு பரிமாறலாம்.
Tags:
பனீர் ஜிலேபிமேலும் செய்திகள்
அவல் லட்டு
அவல் பால் கொழுக்கட்டை
முந்திரி அப்பம்
வெண்ணெய் புட்டு
கோதுமை வாழைப்பழ குழிப்பணியாரம்
இனிப்பு சோமாஸ்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை